வியாழன், 8 ஜூலை, 2010

மூங்கில்

மூங்கில் நெல்

நாம் வளர்க்குற மரங்கள் பூத்து, காய்க்கிறத பாத்திருக்கோம். ஆனா மூங்கில் மரம் பார்த்திருந்தாலும் அது பூ பூத்ததை பார்த்ததில்லை. மூங்கிலில் பூ, காய் அப்படி நினைச்சுகூட பாத்ததில்லை.
 கொல்லிமலைல இருக்கிற மூங்கில் தோப்பு பூத்து குலுங்குது  அதிலிருந்து நெல் கிடைக்குதுனு  கொல்லிமலைஅடிவாரத்திலேயே மூங்கில் தோப்பு உள்ளது.  மலைக்கு மேலே செல்லும் சாலையின் இருபக்கத்திலும் வளர்ந்து நேராக, உயரமாக நின்ற மரங்கள் இப்போது பூத்து வளைந்து நிற்பது மிகவும் அழகாக உள்ளது.
மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும்.
இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. அங்குள்ள மக்கள் அதை சமைத்து சாப்பிடலாம் . 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும். இப்போதுதான் பூத்துள்ளது, இன்னும் ஒரு மாதம் ஆகும் காய்த்து விழுவதற்கு
மரங்கள் இலைகள் எல்லாம் உதிர்ந்து கணுக்களில் பூக்களையும் இளம் பிச்சு காய்களையும் சுமந்து நிற்கின்றன. இது போன்ற மூங்கில் பூக்களுடன் அந்த பகுதியே வெளிர்மஞ்சள் நிறமாக, மாலை நேரத்தில் மிகவும் அழகாக இருந்தது.

 இங்கு மலையில் அடிப்பகுதியில் மட்டும் தான் மூங்கில் மரங்கள் உள்ளன. இதில் பெருவாரை, சிறுவாரை என இரண்டு வகையான மூங்கில்கள் உள்ளன. இங்கு உள்ளவை 1960 க்கு பின் நடப்பட்டவை, இப்போது முற்றி பூத்துள்ளன. இத்தோடு இதன் ஆயுட்காலம் முடிகிறது. காய்த்த பின் இந்த மரங்கள் காய்ந்துவிடும். இவற்றை வெட்டிவிடுவார்கள்

மூங்கில் நெல்லைப்பற்றி சங்க இலக்கியத்திலேயே உண்டு, பாரி வள்ளல் ஆண்ட "பிறான் மலை "மலைப்பகுதியில் மூங்கில் அதிகம் இருக்குமாம் , மூவேந்தர்கள் பாரியின் மீது படை எடுத்து முற்றுகை இட்டப்போது பல காலமாய் வெர்றிப்பெற முடியவில்லை, அப்போது அங்கு வந்த கபிலர் பாரியை எத்தனை காலம் முற்றுகை இட்டாலும் தோற்கடிக்க முடியாது , அவர்கள் உணவுக்கு மூங்கில், தேன், கனிகள் என ஏராளமாய் மலையில் உண்டு என்று சொல்லி புரவலர் போல போய் யாசகமாய் தேசத்தை கேளுங்கள் தருவார் எனப்பாடியுள்ளார்.

மூங்கில் அரிசியை - புட்டு போல - மூங்கில் குழாயில் வேகவைத்து, எலுமிச்சம்பழச்சாறு + இறால் அவியலோடு - தாய்லாந்தில் செய்கிறார்கள்...அருமை...!!!

மூங்கில் பூ பூத்தால் அந்த வருடம் துரதிஷ்டம் அல்லது அத்தவருடம் வெள்ளாமை சரியாக இருக்கது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது.

உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை. அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடி பெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும் வரை அங்கேயே குடும்பத்தை பெருக்கும்.

மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பல மடங்காக பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாயநிலங்களுக்குத்தான் படையெடுக்கும். அப்போது கண்டிப்பாக அந்த வருட விவசாயம் வழக்கத்தை விட அதிக சேதாரத்தைத்தான் சந்திக்கும்.

இதுதான் மூங்கில்பூத்தால் ஆகாது என்ற வழக்கை
காகிதமாகும் மூங்கில் மரங்கள்
மனிதர்களின் பல்வேறு தேவைகளை மூங்கில்கள் ஈடு செய்கின்றன. மூங்கில் கொம்பு, பாய், அரிசி, காகிதம் என பல பயன்கள் மூங்கில்கள் மூலம் கிடைக்கின்றன. கொல்லிமலையில், அடிவாரம் முதல் உச்சி வரை காடுகள் நிறைந்துள்ளன. இங்கு, மூங்கில்கள் அதிகம். மலை உச்சியில் மட்டுமின்றி மலை துவங்கும் அடிவாரமான காரவள்ளியிலும் அடர்ந்த மூங்கில் காடுகள் உள்ளன. மொத்தம் 461 எக்டேர் வீதம் ஆயிரத்து 152 ஏக்கர் பரப்பளவில் இந்த மூங்கில் வனம் அமைந்துள்ளது. மூங்கில் மரங்கள் 40 ஆண்டுகளை கடந்தால் அவற்றில் பூப்பூக்க துவங்கிவிடும். பின், அம்மரங்கள் காய்ந்து விடும். இதுபோல், 80 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் வளர்ந்துள்ள மூங்கில் மரங்கள் தற்போது காய்ந்த நிலையில் உள்ளன. அவற்றை, காகிதம் தயாரிப்பதற்காக தமிழ்நாடு காகித தயாரிப்பு நிறுவனத்தினர் வெட்டி எடுத்து வருகின்றனர்
நோய் தீர்க்கும்  மூங்கில் மரம்

வானத்தில் வில் வடிவத்தில் ஐந்து நட்சத்திரக் கூட்டம் ஒன்று இருக்கிறது. இதற்குப் புனர்பூசம் நட்சத்திரம் என்று பெயர். இது புதன் கிரகம் மிதுனம் ராசியுடன் தொடர்பு கொண்டது. புதன் கிழமை பிறந்தவர்களையும் மே 21 முதல் ஜூன் 20 வரை பிறந்தவர்களையும் ஆட்டிப் படைக்கும் நட்சத்திரமாகும். மேற்கண்ட நாட்களில் புனர்பூசம் நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் பூமியை நோக்கி வரும். 
அதை மூங்கில் மரங்கள் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும். அதுவே அம்மரத்தின் நற்குணமாகக் காணப்படுகின்றன.புனர்பூசம் நட்சத்திரம் சிலசமயம் கெட்ட மின்கதிர்களையும் வீசும். அது மனிதர்களுக்கு பலவகையான உடல் பிரச்சினைகளையும், மனப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நோய்களையும் தீர்த்து வைக்க மூங்கில் மரம் உதவுகிறது.  புனர்பூசம் தோஷம் நீங்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினசரி 30 நிமிடங்கள் மூங்கில் மரத்தைக் கட்டிப்பிடிக்கலாம். இதனால் புனர்பூசம் நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் நீங்கி நோய்கள் குணம் பெறுகின்றன. நல்ல கதிர்வீச்சுகள் மனித உடலுக்கு மாற்றலாகிவிடுகிறது. இம்மரத்தின் நிழலிலும் உட்காரலாம். இதனால் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் கிடைக்கிறது. புனர்பூசம் நட்சத்திரம் கொண்டவர்களுக்குத் தொடர்புள்ள நோய்கள்:தொழுநோய், தோல்நோய்கள், தோல் வெளுத்து விடுதல், மூட்டுவலி, வலியுடன் கூடிய மாதவிலக்கு வெளியேறுதல், வாயுத் தொல்லை, குடல் புழுக்கள், சிறுநீர்க்குறைவு, உடல் பலவீனம், இரத்த சோகை, நாள்பட்ட காய்ச்சல், ஆண்மை சக்தி குறைபாடு போன்றவையாகும். 
மூங்கில் மரத்தின் மருத்துவ குணங்கள்:  இலைகள்:  இதன் இளந்தளிர்கள் ஐந்து கிராம் அளவில் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் கஷாயத்தைக் குடிப்பதால் மாதவிலக்குக் காலங்களில் வரும் வலிகள், நாக்குப் பூச்சித் தொல்லைகள், இரத்த வாந்தி, வயிற்றுப் புண், மூட்டுவலி, ஆஸ்துமா, மூட்டுவலி, பக்கவாதம், நாள்பட்ட காய்ச்சல், கண்நோய்கள், பித்த நோய்கள் மற்றும் சர்க்கரை நோய்க்கு குடிக்கச் செய்வார்கள்.  விதைகள்:  ஒரு கிராம் விதையைத் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது.வேர்:வேரை எரித்துப் பவுடராக்கி ஏழு கிராம் அளவில் எடுத்து எண்ணெயில் கலந்து பூசினால் அம்மைத் தழும்புகள் நீங்குகின்றன. வழுக்கைத் தலை, சொறி, சிரங்குகள் குணம் பெறுகின்றன.மூங்கிலுப்பு: முற்றிய மூங்கிலைப் பாதியாகப் பிளந்தால் வெள்ளை நிறப் பொருள் கிடைக்கும். இதற்கு மூங்கிலுப்பு என்பார்கள். இதை ஒரு கிராம் முதல் ஐந்து கிராம் வரை தினசரி சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு, தலை சுற்றல், வயிற்றுப் புண், பித்த வாந்தி குணம் பெறுவதுடன் இதயம், வயிறு, கல்லீரலுக்கு வலிமையும் தருகிறது.  மூங்கில் உப்பைப் கொண்டு பிரபல யுனானி மருந்து கம்பெனிகளில் காஃபூரி லூலுயி, குர்úஸ தபாஷீர், ஜவாரிஷ் தாபஷீர் என்ற பெயர்களில் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதையும் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தலாம்.  வானவியல் மூலிகைத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது.

மூங்கில்

மூங்கில
கியோத்தோ யப்பானிலுள்ள மூங்கில் காடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
பிரிவு: பூக்கும் நிலைத்திணை
வகுப்பு Liliopsida
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
துணைக்குடும்பம்: Bambusoideae
Supertribe: Bambusodae
Tribe: Bambuseae
Kunth ex Dumort.




மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. உண்மையில் மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் தான். மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான். கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்கள்.
சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா,நேப்பாள்,பங்களாதேஷ், கோஸ்டிரிக்கா, கென்யா ஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகள். இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் முதலிடம் பெற்று நிற்பவை. மூங்கிலின் வேர் நிலத்தை ஒரு அடிக்குமேல் பற்றிக் கொண்டிருக்கும். மூங்கில் ஒன்றோடொன்று இணைந்து வளரும் தொகுப்பு 6 கியூபிக் மீட்டர் வரை இருக்கும்.

பயன்கள்

மூங்கில் குடிசை வீடுகள் கட்டுவதில் மரமாகவும், கட்டிடம் கட்டும் தொழிலிலும், கைவினைப் பொருட்கள் செய்யவும், சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களிலும் மிக முக்கிய பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 1500 பயன்களுக்கு மேல் தரக்கூடிய மூங்கில் மரத்திலிருந்து இன்றும் கூட பலப் பயன்களைப் பெற முடியும் என்று வேளாண் ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் வளர்க்கப்படும் மூங்கிலில் 40 சதவீதம் மரக்கூழ் செய்யவும், காகிதத் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மற்றவை ஒன்று சேர்க்கப்படாத பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

மூங்கில் சிறந்த மரம்!
மூங்கில் என்பது மரமா அல்லது புல் வகையை சேர்ந்ததா என்று கேட்டால், அது புல் வகையை சேர்ந்ததுதான். மூங்கில் வெகு வேகமாக வளரும் தாவரம். இதை முழுமையாக வளர விட்டால், 120 அடி உயரம் வளரும்.
இதன் முக்கியமான வேர்த்தண்டுகள், நிலத்தடியில் பதிந்திருக்கும். இவற்றில் இருந்து மூங்கில் கிளைகள் வெளிக்கிளம்பும். இதுவரை 500 விதமான மூங்கில் வகைகளை கண்டுபிடித்துள்ளனர். மூங்கில் எந்த வகை என்றாலும் சரி, அதன் தடிப்பகுதி வழுவழுப்பாகவும், திடமாகவும் இருக்கும்.
சில மூங்கில்கள் ஆண்டுக்கொருமுறை பயனளிக்கிறது. சில வகை மூங்கில்கள், நூற்றாண்டுகளில் மூன்று, நான்கு முறை பயனளிக்கிறது.
மூங்கில்கள் - வீடுகள், குடிசைகள் கட்டவும், கூரைகள் வேயவும், வரிசையாக சுவர் போல் அமைக்கவும், பாய்களும், கூடைகளும் செய்யவும் என பல வகைகளில் பயன்படுகின்றன. காகிதம் தயாரிக்க மூங்கில் முக்கியமாக தேவைப்படுகிறது.
பல நாடுகளில், மூங்கில் குருத்தை சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். ஜப்பான் நாட்டில் தோட்டக்கலை நிபுணர்கள், மூங்கிலை நீர்க்குழாயாக பயன்படுத்துகின்றனர். தென்கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் பசிபிக் கடலை சார்ந்த தீவுகளில், மூங்கில் பெரும் அளவில் காணப்படுகிறது.
சில வகை மூங்கில்கள், வேர் பகுதியில் வளர்ச்சி ஏற்பட்டு, அதில் ஒரு வகையான விஷப்பொருள் உருவாகும். இதை காசாக மாற்றுகின்றனர். சில வகை மூங்கில்களில், "சிலிக்கா' என்ற பொருள் கிடைக்கிறது.
ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எனவே, மூங்கில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறந்த மரம் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மூங்கில் மரங்களை வளர்த்தால் காற்று மண்டலம் தூய்மைப்படும் என்கின்றனர் உலக சுற்றுச்சூழல் வல்லுனர்கள். எனவே, மூங்கில் வளர்த்து சுற்றுச் சூழலை பாதுகாப்போம்.



 
 
 
சூழலைக் காக்கும் பீமா மூங்கில்
மு.குருமூர்த்தி
Beema 
Moongil 
































'குரோ மோர் பயோடெக்' நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு என்.பாரதி என்பவர் குளோனிங் முறையில் வாழை, கரும்பு, மூங்கில், சவுக்கு, சோற்றுக்கற்றாழை, சீனித்துளசி போன்றவற்றை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசுக்கு மூங்கில் வளர்ப்பது தொடர்பான ஆலோசகர் அவர்.

இவர் கண்டுபிடித்துள்ள பீமா மூங்கில் அடர்த்தியானது. அதனால் இயற்கையிலேயே வலிமையானது. சுற்றுப்புறத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை இழுத்துக் கொள்ளும் ஆற்றல் பீமா மூங்கிலுக்கு நான்கு மடங்கு அதிகம். ஓர் ஏக்கரில் உள்ள மற்ற மரங்கள் 15 டன் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்வதாகக் கொண்டால் ஓர் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பீமா மூங்கில் 70 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறதாம்.

இப்போது உலகம் வெப்பமடைவதற்குக் காரணம் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற தொழில்வள நாடுகள்தான். உலகின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் இதுபோன்ற நாடுகள் அவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவிற்கு ஏற்ப மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டபோது அமெரிக்கா தவிர பிற நாடுகள் ஒப்புக்கொண்டன. அதன்படி உலகின் எந்த மூலையில் மரங்களை வளர்த்தாலும் அதற்கான செலவினத்தை மேலே சொன்ன நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பீமா மூங்கிலை இந்தியாவில் பயிர் செய்தால் பெருமளவு அன்னிய உதவி நமக்குக் கிடைக்கும் என்கிறார் திரு என். பாரதி. பீமா மூங்கிலின் அளப்பரிய பயன்களை பட்டியல் போடுகிறார் திரு. என். பாரதி.

அனல் மின்சாரநிலையங்களில் பயன்படும் நிலக்கரி ஒரு டன் ஆறாயிரம் ரூபாய். அனல் மின்சார நிலையங்களில் பீமா மூங்கிலைப் பயன்படுத்தினால் ஒரு டன் இரண்டாயிரம் ரூபாய். நிலக்கரியை எரிப்பதால் காற்றுமண்டலத்தில் கலக்கும் கார்பனின் அளவைவிட இருபது மடங்கு குறைவான கார்பன் மட்டும்தான் மூங்கிலை எரிப்பதால் வெளியாகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும்போது மூலப்பொருட்களுடன் பாதியளவு மூங்கில் இழைகளைக் கலந்து தயாரிக்கலாம் என்று பெங்களூரில் உள்ள ' இந்தியன் வுட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' கண்டுபிடித்துள்ளது. இதனால் பெட்ரோலின் உபயோகம் குறையும். மூங்கிலில் இருந்து பஞ்சு தயாரிக்க முடியுமாம். ஒரு ஏக்கர் பருத்தியில் 500 கிலோ பஞ்சு கிடைக்குமானால் ஒரு ஏக்கர் மூங்கிலில் 10 ஆயிரம் கிலோ பஞ்சு கிடைக்குமாம்.

பெரிய நிறுவனங்கள் செயற்கை இழைகள் தயாரிக்க யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கின்றன. பூமியின் நீராதாரத்தை வற்றச் செய்யும் பகாசுரன்கள் இவை. ஆனால் மூங்கில் மரங்கள் நீர் வளத்தை அழிப்பதில்லை. அரசு மூங்கில் வளர்ப்பதற்கு மானியம் தருகிறது. மானியத்தைப் பயன்படுத்தி மூங்கில் வளர்ப்பதற்கு தமிழக விவசாயிகள் முன்வர வேண்டுமென்கிறார் இந்தத் தமிழர்

மூங்கில் ஒவ்வொரு முளை விடும் போதும்
ஒரு சத்தம் கொடுக்கும் என்று சொல்கிறார்கள்
அதே போல
தென்னம் பாளையில் பூக்கள் மலரும் போது ஒரு சத்தம் கொடுக்கும் என்றும் அனுபவஸ்தர்கள் சொல்லுகிறார்கள்
ஆகவே பெரியவர்கள் சொல்வதையும் கேட்போம்
மரங்கள் வளருவதை பார்ப்போம், , மரம் வளருவதையும் கேட்போம் இயற்கையோடு இசைந்து வாழ்வோம்
ஆமாம் மூங்கில் குருத்துகள் வரும்போது கேட்கும் சத்தம் மத்தளமாகவும், மூங்கில் துளைகளின் வழியே பயணப்படும் காற்று ஊதும் குழலாக மாறி அளிக்கும் ஊதுகுழலின் நாதத்தையும் ரசித்து இசை பட வாழ்வோம்
ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி
மூங்கில் போல் முடிவில்லாது வாழ்வோம்
கவையாகி கொம்பாகி காட்டகத்தே
நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பரிய மாட்டாதவன் நன் மரம்
என்று ஔவையார் கூறியபடி

லேப்டாப் தயாரிக்க மூங்கில் மரம் பயன்படுகிறது
















பிளாஸ்டிக், உலோகத்திற்கு பதிலாக மூங்கிலை பயன்படுத்தி மடிக்கணினிகள் (லேப்டாப்) தயாரிக்க தைவான் நாட்டு கம்பயூட்டர் உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புதிய மூங்கில் மடிக்கணினியை உருவாக்கியுள்ள அசுஸ்டெக் நிறுவனம், அதற்கு அசுஸ் ஈகோ புக் (Asus Eco Book) என பெயரிட்டுள்ளது.

மடிக்கணினி திரை மற்றும் மைக்ரோ பிராசசரில் ஏற்படும் வெப்பத்தை தங்கக் கூடிய தன்மை மூங்கில்-க்கு உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இது முற்றிலுமான வெற்றியடைந்த பின்னரே வர்த்தக ரீதியாக மூங்கில் மடிக்கணினிகள் விற்பனைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மடிக்கணினிகள் மற்றும் கணினி தொடர்பான உபகரணங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் நிலையில், மூங்கிலை கொண்டு மடிக்கணினி தயாரிக்கும் பணியை அசுஸ்டெக் நிறுவனம் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூங்கில் கடல் என்னும் இயற்கைக் காட்சி மண்டலம்

சிசுவான் மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலம், சிசுவான் மாநிலத்தின் யீ பினின் புறநகரில் அமைந்துள்ளது. மூங்கில் இயற்கைக் காட்சியை முக்கிய தனிச்சிறப்பியல்பாக கொண்டு, தொல் பொருட்களுடைய காட்சி இடமாகும். இதன் பரப்பளவு, 120 சதுரக் கிலோமீட்டராகும். இம்மண்டலத்தில், 70 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்பில் மூங்கில்கள், சுமார் 500 மலைகளில் நிறைந்து, பச்சைக் கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால், இது, மூங்கில் கடல் என்று அழைக்கப்படுகிறது. இம்மண்டலத்தின் பணியாளர் லின் வேய் கூறியதாவது:

இந்த மூங்கில் கடலில், NAN மூங்கில், மிகவும் அதிகமாகும். இந்த வகை மூங்கில், ஆண் மற்றும் பெண் இனங்கள் கொண்டது. அனுபவம் மிக்க விவசாயிகள், ஆண் மூங்கிலையும் பெண் மூங்கிலையும் அடையாளம் கண்டுக் கொள்ளலாம். மூங்கிலின் முதலாவது கிளையைப் பார்த்து, தனியாக ஒரு கிளை உள்ள மூங்கில், ஆண் மூங்கிலாகவும், இரு கிளைகள் உள்ள மூங்கில், பெண் மூங்கிலாகவும் வேறுபடுத்தப்படுகின்றன என்றார் அவர்.
இந்த மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலத்தில், 400க்கு அதிகமான வகை மூங்கில்கள் உள்ளன. NAN மூங்கில் தவிர, பல அரிய மூங்கில் வகைகள், உண்டு. இதில், மனித முகத்தைப் போன்ற மூங்கில், குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மூங்கிலின் கனுக்கள், மட்டமாக வளர்கின்றன. மனித முகத்தைப் போன்ற மூங்கிலின் கனு, சாய்வாக வளர்கிறது.

ஒவ்வொரு கனும், குழந்தையின் முகத்தைப் போன்றது. வழிகாட்டிகள் அறிமுகப்படுத்தாத வரை, மூங்கில் கடலில் முதல் முறை சென்று பார்வையிரும் பயணிகள், இதை மூங்கிலாக கருதப் போவதில்லை.
இந்த மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலத்தில், மூங்கில் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. இதில் 58 அரிய மூங்கில் வகைகள் காணப்படலாம். 1986ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்ட இந்த மூங்கில் அருங்காட்சியகம், சீனாவில் முதல் சிறப்பு மூங்கில் அருங்காட்சியகமாகும். அதன் முக்கிய கட்டிடங்களின் பரப்பளவு, 3800 சதுர மீட்டராகும். பல்வேறு வகை மூங்கில் மாதிரிகள், மூங்கில் ஆயுதங்கள், மூங்கில் இசைக் கருவிகள் முதலிய மூங்கில் கலைப்பொருட்கள், இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம், சிசுவான் மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள மூங்கில் கடலின் தரமிக்க மூங்கில்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை என்று லீன் வேய் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

இது, சீனாவில், மூங்கிலை முதன்மையாகக் கொண்ட முதலாவது சிறப்பு அருங்காட்சியகம் ஆகும். உலகளவில் மிக சிறிய மூங்கில் வகையான CUI மூங்கில், ஒட்பீட்டளவில் உயரமான NAN மூங்கில் முதலியவை இதில் இடம்பெறுகின்றன என்றார் அவர்.
இந்த அருங்காட்சியகத்தின் நுழைவாயிலிருந்து வெளியே சென்று, காட்சி மண்டலத்தின் பாதையில் நடந்து சென்றால், "கடலுக்குள்ளே கடல்"என்னும் மற்றொரு காட்சியிடத்துக்கு வந்தடையும். அதன் நுழைவாயில், சிசுவான் பிரதேசத்தின் பாரம்பரிய வளைவின் வடிவத்தை மாதிரியாக கொண்டு கட்டியமைக்கப்பட்டது. சிசுவான் மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள மூங்கில் இயற்கைக் காட்சி மண்டலத்தின் பள்ளத்தாக்கில் "கடலுக்குள்ளே கடல்" என்னும் காட்சி இடம், அமைந்துள்ளது. சுமார் 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவான இந்த ஏரி, மூங்கில் கடலிலுள்ள ஒரு சிறிய கடல் போன்றது. எனவே, இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. பயணியர்கள், மூங்கில் கட்டுமரம் மூலம், ஏரியைச் சுற்றுவந்து காட்சிகளைக் கண்டு களிக்கலாம் என்று, வழிகாட்டி HU TONG LIN கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

நான் இப்போது பெரிய மூங்கில் கடலில் இருக்கின்றேன். இந்த ஏரியை கடலாக, உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். படகில் இந்த ஏரியைச் சுற்றிப் பார்த்தால், சுற்றி எங்கும் மூங்கில் நிறைந்து காணப்படும் என்றார் அவர்.

3 கருத்துகள்:

  1. குருத்து உண்பதின் மருத்துவ பயன்கள் பற்றி குறிப்பிடவில்லை. குறிப்பிட்டிருந்தால் நன்மை பயக்கும்

    பதிலளிநீக்கு
  2. இந்த மூங்கில் காடுகள் இந்த உலகத்திற்கு கிடைத்த அறிய பொக்கிஸம்

    பதிலளிநீக்கு
  3. மூங்கிலின் வகை மற்றும் அதன் பெயர்களை குறிப்பிட்டிருந்தால் நல்லாருக்கும்.

    பதிலளிநீக்கு