திங்கள், 13 செப்டம்பர், 2010

தகவல் பெறும் உரிமை சட்டம்:விழிப்புணர்வுக்கு விண்ணப்பம்

ஊட்டி:தகவல் பெறும் உரிமை சட்ட விழிப்புணர்வு முகாமில் பங்கேற்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசின் தகவல் பெறும் உரிமை சட்டத்தை சிலர் பயன்படுத்தினாலும், பலர், சட்டத்தின் தன்மை அறியாமல் உள்ளனர். தகவல் பெறும் உரிமை சட்ட விழிப்புணர்வு பயிற்சி வழங்க, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
சட்டம் குறித்த விளக்கங்கள், முறையீடு, மேல் முறையீடு, பெறப்பட்ட தகவல்கள் மூலம் முறைகேடுகளை களைவது, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, வக்கீல்கள் மூலம், ஆகஸ்ட் இறுதி வாரத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பங்கேற்க விரும்புவோர், பெயர், முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி, மொபைல் போன் எண் குறிப்பிட்டு, "தலைவர், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், வணிக வளாகம், பந்தலூர்-643 233' அல்லது, "பொதுச் செயலர், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பு, வசம்பள்ளம், குன்னூர்-5' என்ற முகவரிக்கு, ஆக., 10ம் தேதிக்குள், விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.விபரங்களுக்கு, 94885-20800, 93453-98085 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக