திங்கள், 13 செப்டம்பர், 2010

ஆங்கிலப் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்

நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம், ஊட்டியில் நடத்தப்பட்டது.தனியார் ஆங்கிலப் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க நடவடிக்கை எடுப்பதுடன், கட்டணப் பட்டியலை, பெற்றோர் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; நீலகிரியில் குன்னூர், ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில், இலவச பொதுக் கழிப்பிடம் அமைக்க வேண்டும்; கட்டணக் கழிப்பிடங்களில் முறையாக கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பல ரேஷன் கடைகளில், அரசுப் பணியில் அல்லாதவர்கள் பணிபுரிகின்றனர்;
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பஸ்கள், மினி பஸ்களின் படிக்கட்டுகள் மிக உயரமாக உள்ளதால், வயதானவர்கள், குழந்தைகள், பஸ்சில் ஏற முடியாத நிலை உள்ளதால், போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிவசுப்ரமணியம், பொதுச் செயலர் வீரபாண்டியன், பொருளாளர் வனிதாகுமாரி, கணேஷன், சுப்ரமணி, விஜயகுமார், சாந்தி பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக