ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

தண்ணீர்... தண்ணீர் சுகாதாரமற்ற பாக்கெட் குடிநீர் புற்றீசல் போல டப்பா கம்பெனிகள் அப்பாவி மக்களிடம் சுரண்டல்

இயற்கையாக கிடைக்கும் குடிநீர்...இது முதலீடில்லா வியாபாரமாக தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? ரூ.250 கோடி.
இதில் சென்னை மட்டுமல்ல, திருச்சி, மதுரை, கோவை என்ற நகரங்களிலும் கூட குடிநீர் பகல் கொள்ளை சூப்பராய் நடக்கிறது. ஒரு தண்ணீர் கேன் சப்ளை செய்து ரூ30 & 50 வரை பணம் வாங்குகிறார்கள். அதற்கு மலிவாகவும் விற்கின்றனர். ஆனால், தரம்...சுகாதார பாதுகாப்பு...? பூஜ்யம் தான்.
ஒரு உண்மை தெரியுமா? இந்த 20 லிட்டர் கேனில் தண்ணீர் நிரப்ப வெறும் 5 ரூபாய் தான் செலவு. சுத்திகரிக்கப்பட்டதா, சுத்தமாக்கப்பட்டதா என்றெல்லாம் கேட்க முடியாது. சொன்னது தான் விலை. குடிசைத் தொழில் போல பரவி விட்டது. 
பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கேன் தண்ணீர் நிரப்பும் இடங்களை, இந்திய பொது சுகாதார சங்கம் கடந்த ஆண்டு ஆய்வு செய்தது. அப்போது காஞ்சிபுரம் அருகே சில இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, எந்த சுத்திகரிப்பும் இல்லாமல் அப்படியே ஒரு லிட்டர் பாட்டில் மற்றும் 20 லிட்டர் கேன்களில் அடைக்கப்படுகிறது. மூடி மட்டும் சீல் வைக்கப்பட்டு, எப்போதோ அனுமதி வாங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுவது தெரியவந்தது. 
30 இன்...15 அவுட்...
முதலீடு இல்லாமல் குடிநீர் கேன் வியாபாரத்தை துவங்கி விடலாம். அதிலும், கேனில் தண்ணீர் நிரப்பி தரும் தொழிலுக்கும் அமோக கிராக்கி. கடந்தாண்டு மட்டும் 30 புதிய நிறுவனங்கள் முளைத்துள்ளன. லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்த நிறுவனங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல், சட்டவிரோதமாக, குடிசைத் தொழில் போல நடத்தும் டப்பா கம்பெனிகள் எண்ணிக்கைக்கு அளவில்லை. இந்தாண்டு நிலைமை கேட்கவே வேண்டாம். அதற்கும் மேல்.அதே சமயம், தரமற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு, 15 நிறுவனங்களின் உரிமத்தை இந்திய தரச்சான்று தென்னக மண்டல அமைப்பு ரத்து செய்துள்ளது. 
சிலர் ஐஎஸ்ஐ முத்திரையை போலியாக பயன்படுத்தியுள்ளனர். இன்னும் சிலர், பூச்சி, புழுக்களுடன் குடிநீர் நிரப்பி சப்ளை செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பக்கம் நடவடிக்கை தொடர்ந்தாலும், இன்னொரு பக்கம் இது புற்றீசல் போல பரவுவதற்கு காரணம், குடிநீர் கிராக்கி தான்.
785 நிறுவனங்கள்...
சென்னையில் சப்ளை ஆகும் குடிநீர் பாக்கெட்கள், கேன்கள், வாட்டர் பாட்டில்கள் எல்லாமே, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 290 நிறுவனங்களில் இருந்து சப்ளை ஆகின்றன.
இதுபோல, திண்டிவனத்தில் ஆரம்பித்து, குமரி வரை 785 நிறுவனங்கள் உள்ளன. கைவிரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் தரமான குடிநீர் சப்ளை செய்கின்றன.
வருமானம் அதிகமாக உள்ளதால், ஆண்டுக்கு ஆண்டு புற்றீசல் போல நிறுவனங்கள் முளைக்கின்றன. இவற்றில் சென்னையில் மட்டும் 100 புதிய கம்பெனிகள் முளைத்து விட்டன. குடிசைத் தொழில் போல இந்த வியாபாரத்தை நடத்துகின்றனர்.
நாளுக்கு
83 கோடி லிட்டர்
சென்னையின் குடிநீர் தேவை ஒரு நாளைக்கு 83 கோடி லிட்டர். இருந்தாலும், குடிநீர் சப்ளையில் பற்றாக்குறை இருப்பதால், தனியார் தான் அதை போக்குகின்றனர்.
தனியார் மூலம் ஒரு நாளைக்கு 70 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை ஆகிறது. கடந்தாண்டை விட இது 15 சதவீதம் அதிகம்.
தமிழ்நாடு கேன், பாட்டில் வாட்டர் உற்பத்தியாளர் சங்கம் தரப்பில் கேட்டபோது, சங்கத்தில் உறுப்பினராக உள்ள யாரும் தவறு செய்வதில்லை. நாங்கள் தரத்தை துல்லியமாக பின்பற்றுகிறோம். ஆனால், உறுப்பினராக இல்லாத பல நிறுவனங்கள் புற்றீசல் போல பெருகி வருகின்றன என்று விளக்கம் கிடைத்தது.
 
மெட்ரோ வாட்டர் நிலை
மெட்ரோ வாட்டர் மூலம் குழாய்களில் வரும் தண்ணீர் சுத்தமானதா? என்று கேட்கலாம். மெட்ரோ வாட்டர் மூலம் கிடைக்கும் தண்ணீர் சுத்தப்படுத்தும் முறை நன்றாக உள்ளது. அனைத்துவித பரிசோதனைகளும் ஆய்வகங்களில் முறையாக செய்யப்பட்ட பின் தான் தினமும் 83 கோடி லிட்டர் குடிநீர் வீடுகள் உட்பட எல்லா இடங்களுக்கும் சப்ளை ஆகிறது. கீழ்ப்பாக்கத்தில் இரண்டு, புழல், செம்பரம்பாக்கம், வீராணத்தில் தலா ஒன்று என்று வீதத்தில் வாட்டர் ட்ரீட்மென்ட் பிளான்ட்கள் உள்ளன. இவற்றில் பல கட்ட சோதனைகளுக்கு பின் தான், குடிநீர் சப்ளை ஆகிறது. இதனால், மெட்ரோவாட்டர் குடிநீரை பயன்படுத்துவதே நல்லது என்று சொல்லும் டாக்டர்கள், எனினும் காய்ச்சி குடிப்பதே நல்லது என்றும் கூறுகின்றனர்.


வேட்டு வைக்க வருது கிடுக்கிப்பிடி
கனிமச்சத்து உட்பட பல சத்துக்களை சேர்த்து தான் சுத்திகரித்து தருகிறோம் என்று பாக்கேஜ் குடிநீர் நிறுவனங்கள் சொன்னாலும், தரம் கண்டிப்பாக இல்லை. சில குடிநீர் கேன்களை பார்த்தாலே எரிச்சல் வரும்.
சேறு, சகதியுடன் கேன்கள், சுகாதாரமற்ற பாக்கெட்கள் தான் கடைகளில் பரவி இருக்கின்றன. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய அலுவலகம் சென்னையில் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மூலிகை வாட்டர் உட்பட குடிநீர் பாக்கெட்கள், கேன்கள் விஷயத்தில் 
தர நிர்ணயம் பற்றி இறுதி செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு தயாராக உள்ளது. 

என்னவெல்லாம் கலக்குது?
மெட்ரோ வாட்டர் பைப்கள் சில இடங்களில் உடைந்துளளன. பராமரிப்பு இல்லாமல் உள்ளன. கழிவுநீர் கலக்கின்றன.

சுத்திகரிப்பு நிலையங்களில் என்ன தான் சுத்தம் செய்தாலும், இதனால், சப்ளை வழியில் மனித மலங்கள், பிராணிகள் கழிவுகள் குடிநீரில் கலக்கின்றன.
இப்படி கலப்பதால், தண்ணீரில் இ & கோலி உட்பட கோலி பாக்டீரியாக்கள் தண்ணீருடன் சேர்கின்றன.
என்னென்ன வரும்?
 
வாந்தி, பேதி என்று வயிற்றுப்போக்கு தான் ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு எளிதில் இவை ஏற்படும் அடிக்கடி.
 
இவை தொடர்ந்தால், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் எல்லாம் பாதிக்கப்படும். கடைசியில் எதிர்ப்பு சக்தி குறையும்.
 ற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை� என்று தெரிவித்தனர்.


காலரா, டைபாய்டு தான் உச்சகட்டம்.
பாக்கெட்டில் அள்றாங்க
சென்னையில் இந்தாண்டு மட்டும் நூற்றுக்கும் மேல் பாக்கெட், பப்பிள் டாப் வாட்டர் நிறுவனங்கள் முளைத்து விட்டன.

450 நிறுவனங்கள் மட்டும் பிளாஸ்டிக் பாக்கெட் வாட்டர் விற்று மட்டும் லகரங்களில் காசை அள்ளுகின்றன.

250 மில்லி வாட்டர் பாக்கெட்கள் மட்டும் ஒரு நாளைக்கு 15 லட்சம் விற்பனை ஆகின்றன. மூலிகை வாட்டர் லேட்டஸ்ட்
இப்போது சென்னையில் லேட்டஸ்ட் என்ன தெரியுமா? மூலிகை வாட்டர் தான். கேன்களிலும், பாட்டில்களிலும் நிரப்பி விற்கப்படுகிறது. பல நிறுவனங்களும் இதில் சூப்பர் காசு அள்ளுகின்றன. தரம் மட்டும் ஜீரோ.
தர நிர்ணய தென் மண்டல அதிகாரிகளிடம் விசாரித்தபோது, கடந்தாண்டு 50க்கு மேற்பட்ட நிறுவனங்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை சென்னையை சுற்றி உள்ளவை. லைசன்ஸ் பெற்ற நிறுவனங்களில் மட்டும் நாங்கள் சோதனை செய்கிறோம். மூலிகை வாட்டர் பற்றி தரநிர்ணயம் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்