செவ்வாய், 3 ஜனவரி, 2012

Consumer Protection Act 1986 tamil

Consumer Protection Act 1986
இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே – எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.
நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல்பாடும்:
கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி – மாவட்ட அளவில் ” மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”, மாநில அளவில் “மாநில ஆணையம்”, தேசிய அளவில் ” தேசிய ஆணையம்” அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:
20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பி னரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள்படியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.
  • 1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-
  • 1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
  • 5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
  • 10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-
வழக்கு தொடர தேவையான தகுதிகள்:
  1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.
  2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
  3.  புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
  4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.
யார் மீது வழக்கு தொடர முடியும்?
1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.
உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் – பைக் – கார் – லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.
2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.
உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.
எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டிய்லிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டிக்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல” என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.
வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:
உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே ” குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்” என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.
தரம் சம்பந்த பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.
எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.
இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி:-சட்டம் நம் கையில்


11 கருத்துகள்:

  1. திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தமிழ்நாடு தகவல் ஆணைய சேவை குறைபாடு குறித்து புகார் செய்தேன். மன்றம் ஏற்கவில்லை தனது ஆள்வரையில்லைஎன.நீர் சென்னை தெற்கு மாவட்ட குறைதீர் மன்றத்தில் தான் புகார்செய்யவேண்டும் என அறிவறுத்தியதின்படி சென்னை தெற்கு குறைதீர் மன்றத்தில் வழக்கு பதிவுசெய்து எதிரியான தெவல் ஆணையர் ஆஜராகவில்லை ஓராண்டு கழித்து மன்றம் கள்ளுபடி செய்து உத்திரவு அளித்துள்ளது இது குறித்து கருத்து வழங்கவும். சிவ.தியாகராஜன், 13காந்திரோடு, போளூர் 606803.

    பதிலளிநீக்கு
  2. திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்குகள் பதிவுசெய்து இரண்டு வருடம் ஆகியும் எதரி வக்கீல் கவண்டர் போடாமல் உள்ளார் மன்றம் இன்றுவரை யாதொரு தீர்வும் எடுக்காமல் இருப்பதுதான் நியதியா? இபுபடிதான் நுகர்வோர் குறைக்கு தீர்ப்பா? சட்டம் செயலாக்கம் இல்லையே. தாங்கள் எனக்களிக்கும் கருத்து.....சிவ.தியாகராஜன். சமூகார்வலர், போளூர் 606803. email: kansivarajan50@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. counter should be filed with in 60 days after filing vakalath otherwise the Forum can pass EX-PARTY ORDER against the respondent. your counsel has to mention the number f days passed before the forum

      நீக்கு
  3. naan puthusa phone vanginen.vangi 20 nalalaila athu repair agiduchu,service center koduthuten.aana ennaiyodu 3 months agiduchu ennum phone pathina entha thagavalum illa.atha patri cell phone companyla ketten.athukkum pathil illa.so naan consumer courtla case file pannalama.enkitta invoice,service center jobsheet ellame erukku.epdi case file pantrathu

    பதிலளிநீக்கு
  4. naan puthusa phone vanginen.vangi 20 nalalaila athu repair agiduchu,service center koduthuten.aana ennaiyodu 3 months agiduchu ennum phone pathina entha thagavalum illa.atha patri cell phone companyla ketten.athukkum pathil illa.so naan consumer courtla case file pannalama.enkitta invoice,service center jobsheet ellame erukku.epdi case file pantrathu

    பதிலளிநீக்கு
  5. கடந்த ஆண்டு Tvs ல் scooty pep வாங்கிணோம் மூன்று மாத பணம் கட்டவில்லை 12/7/2018 அன்று repossessing பற்றிய intimation கடிதம் வந்தது அதன் பிறகு ஒரு மாத தொகை செலுத்திய நிலையில் 18/7 அன்று வண்டியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்கள் இதை கண்ட என் 3 வயது மகன் பயந்து அழுது வண்டியை திருடன் பிடுங்கி சென்று விட்டார்கள் அழுது கொண்டே இருக்கிறான் இதற்கு ஏதாவது நுகர்வோர் நீதி மன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்குமா அதற்கு நாங்கள் என்ன செய்வது pls help me.

    பதிலளிநீக்கு
  6. ITHIL ONLINE PURCHASES ADANGUMA AVARGAL MEETHU VAZHAKKU THODARA MUDIYUMA?

    பதிலளிநீக்கு
  7. Oru scan centrela late pannranga appointment vangunathuku enkita phonela pesuna record irukku but avanga antha day fulla delay pannutanga ithuku ethum consumer Law mulama Action edukalama

    பதிலளிநீக்கு
  8. Revenue department e service center against the rejected an application there after going to madras high court filing the writ petition against revenue department and the honorable high court passed an order to issue community certificate. Then order was passed after 1 month issued certificate. So I approach the consumer redresel forums pls any answer

    பதிலளிநீக்கு

  9. பரிந்துரைகளுக்கு நன்றி. ரேரா புகாரைப் பதிவுசெய்ய விரும்பும் மக்களுக்கு ஏதாவது சேர்க்க விரும்புகிறேன். RERA சட்டத்தின் நோக்கம் வாங்குபவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதும், ரியல் எஸ்டேட் பிரிவில் மூலோபாயக் கொள்கைகள் மற்றும் பரிமாற்றங்களின் நிலைத்தன்மையும் நிறுவனமயமாக்கலும் ஆகும். இது கூடுதலாக வாங்குபவர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் உற்சாகத்தை சரிசெய்ய முயற்சிக்கிறது, அவர்கள் இருவர் மீது சில கடமைகளை கட்டாயப்படுத்துவதன் மூலம் வாங்குபவர் மற்றும் விளம்பரதாரர் மத்தியில் தரவின் சமநிலையை வளர்க்கும். ரேரா புகார் நிலை சரிபார்ப்புடன் மீண்டும் புகார் பதிவுக்கு வருகை:Rera Complaint

    பதிலளிநீக்கு