புதன், 6 பிப்ரவரி, 2013

நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம், ஊட்டியில் நடத்தப்பட்டது.


ஆங்கிலப் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்

நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம், ஊட்டியில் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு     கூட்டமைப்பின்   பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.

தலைவர் சிவசுப்ரமணியம், பொதுச் செயலர் வீரபாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில் கிழ்க்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன

கட்டாய கல்வி உரிமை சட்டத்தினை மீறி பல தனியார் பள்ளிகள் தற்போதே சேர்க்கை ஆரம்பித்துள்ளன இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறையை வலியுறுத்துதல்
  
தனியார் ஆங்கிலப் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க நடவடிக்கை எடுப்பதுடன், கட்டணப் பட்டியலை, பெற்றோர் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;

நீலகிரியில் குன்னூர், ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில், இலவச பொதுக் கழிப்பிடம் அமைக்க வேண்டும்; கட்டணக் கழிப்பிடங்களில் முறையாக கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;

புதிய ரேசன் கார்டுகள் மற்றும் ரேசன் கார்டு தொலைந்து போனவர்கள் நகல் அட்டைகள்  கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேசன் கார்டுகள் கிடைக்காமல் உள்ளனர் இதனால் ரேசன் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதோடு அரசு சார்பான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பெற இயலாமல் உள்ளனர் எனவே விரைவில் விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு புது ரேசன் கார்டுகள் மற்றும் நகல் ரேசன் கார்டுகள் வழங்க வேண்டும்

ரேசன் கடைகளில் மின்னணு எடை தராசுகள் பயன் படுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பல ரேஷன் கடைகளில், அரசுப் பணியில் அல்லாதவர்கள் பணிபுரிகின்றனர்; இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடுவட்டம் மசினகுடி ரேசன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் மட்டும் மாற்றவில்லை என புகார்கள் பெறபடுகிறது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

பேருந்துகளில் படிக்கட்டு பயணம் இன்னும் தொடர்கிறது அதை தடுக்க வேண்டும் அரசு உத்திரவு படி அனைத்து பேருந்துகளுக்கும் கதவு பொறுத்த வேண்டும்

அரசு பஸ்கள், மினி பஸ்களின் படிக்கட்டுகள் மிக உயரமாக உள்ளதால், வயதானவர்கள், குழந்தைகள், பஸ்சில் ஏற முடியாத நிலை உள்ளதால், போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவ மனைகளில் உரிய நேரத்தில் மருத்துவர்கள் பணிக்கு வருவதில்லை பணி நேரத்தில் மருத்துவர்களை பர்ர்க்க முடியாமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் உரிய ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சிகளில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் தேர்வு நேரம் நெருங்கும் வேளையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி என அலைகலிப்பது மாணவர்களின் கல்வி நிலையை பாதிக்கும் எனவே தேர்வு நேரங்கள் தவிர்த்து மாணவர்களை கல்வி பாதிக்காதவாறு  பயிற்சிகள் நடத்த வேண்டும்.

பல பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க அரசை வலியுறுத்துதல்

என்பன உட்பட பல தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொருளாளர் வனிதாகுமாரி, கணேஷன், சுப்ரமணி, விஜயகுமார், சாந்திதனிஸ்லாஸ் தங்கவேல் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.
முன்னதாக மாரிமுத்து வரவேற்றார் முடிவில் கணேஷன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக